Friday, 20 January 2017

Anaithum Neeye Purushothama


Lord Vishnu



           அனைத்தும் நீயே புருஷோத்தமா

   தாயும் ஆனாய் தந்தையும் ஆனாய் !
   உறவும் நானே என்று நீயே வந்தாய் !
   உயிரும் ஆனாய் உணர்வும் ஆனாய் !
   உயிருடன் கலந்த சுவாசமும் ஆனாய் !
   அன்பும் ஆனாய் அறிவும் ஆனாய் !
   அறிவில் கலந்த ஞானமும் ஆனாய் !
   கண்ணீர் ஆனாய் கடலும் ஆனாய் !
   கண்ணீர் துடைத்திடும் கடவுளும் ஆனாய் !
   ஊரும் ஆனாய் உலகமும் ஆனாய் !
   உலகைக் காத்திடும் உன்னதம் ஆனாய் !
   மாயங்கள் புரிந்திடும் மன்னவன் ஆனாய் !
   நோய்களைத் தீர்த்திடும் மருத்துவன் ஆனாய் !
   காற்றும் ஆனாய் கடலும் ஆனாய் !
   வானையும் மண்ணையும் அளந்தே நின்றாய் !
   வெண்ணெயும் உண்டாய் மண்ணையும் உண்டாய் !
   அனைத்திலும் நீயே என்னும் தத்துவம் தந்தாய் !



           You are Everything to me Purushothama

  You are my mother and You are my father !
  And You are my bonding !
  You are my life and You are my soul !
  And You have become the breath of my Life !
  You are the Love and You are the Knowledge !
  And You are the Wisdom of the inner depth of Knowledge !
  You are my tears and You are the ocean !
  And You are the God who destroys the Sorrows !
  You are the Place and you are the World !
  And You are the Saviour of all the Worlds !
  You are the Lord who performs all the mysteries !
  You are the Lord who is the medicine for all the diseases !
  You are the Wind and You are the Sea !
  You are the one who stood measuring the Earth and the Sky with the Feet!
  You are the one who ate butter and You are the one who ate mud as well !
  You are the one who thought us that You are residing EveryWhere !!



No comments:

Post a Comment