அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில், திருவதிகை
கோவில் விவரங்கள்
மூலவர்
ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி சயன திருக்கோலம் நாபிக்கமலத்தில் பிரம்மா.
தாயார்
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் அமர்ந்த திருக்கோலம் தனி சன்னதி.
உற்சவர்
ஸ்ரீ அழகிய மணவாளன் பெருமாள் என்னும் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி உடன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்.
தல தீர்த்தம்
கருட நதி , பினகினி என்னும் பென்னை ஆறு.
மற்ற சன்னதிக்கள்
ஸ்ரீ கோதண்டராமர் சன்னதி
மூலவர் சீதா தேவி சமேத ஸ்ரீ கோதண்டராமர் நின்ற திருக்கோலம் உடன் லக்ஷ்மணர் ஆஞ்ஜனேயர் சுவாமி.
உற்சவர் சீதா தேவி உடன் ஸ்ரீ கோதண்டராமர் மற்றும் லக்ஷ்மணர் ஆஞ்ஜனேயர் சுவாமி.
ஆண்டாள் சன்னதி , சக்கரத்தாழ்வார் சன்னதி , கருடர் சன்னதி.
பிரார்த்தனை
தரிசன நேரம்
காலை : 7.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை : 5.00 மணி முதல் 8.30 மணி வரை.
தொடர்புக்கு
திரு. சேஷாத்ரி பட்டர் : 9942656612
திரு. பாலாஜி பட்டர் : 9626669312
முகவரி
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில்,
வடக்கு பெருமாள் கோவில் வீதி,
திருவதிகை, திருவதிகை போஸ்ட்,
பன்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம், தமிழ் நாடு - 607106
கோவில் அமைந்துள்ள இடம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பன்ருட்டியிலிருந்து 3 கி.மி. தொலைவில் மற்றும் விழுபுரத்திலிருந்து 32 கி.மி தொலைவில் இருக்கும் திருவதிகை என்னும் கிராமத்தில் இத்திருதலம் அமைந்துள்ளது.

தல வரலாறு
புராண விஷ்ணு தலங்களில் ஒன்றான இத்திருத்தலம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலதில் மூலவராக ஸ்ரீ ரங்கநாதரும் ஸ்ரீ ரங்கநாயகி தாயாரும் எழுந்தருளியுள்ளனர். இங்கு மூலவர் ஸ்ரீரங்கநாதர் சுவாமி சயன திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார் சமேதராய், நாபிக்கமலதில் பிரம்மருடன் அருள்பாலிக்கிறார். இத்திருதலதில் ஸ்ரீ ரங்கநாதர் உற்சவர் அழகிய மணவாளனாய் ஸ்ரீதேவி பூதேவி தாயார் உடன் காட்சி தருகிறார்.

இத்திருத்தலத்தில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் 8 அடி உயர மூலவராக அமர்ந்த திருக்கோலதில் பேரழகுடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சீதா பிராட்டியுடன் ஸ்ரீ கோதண்ட ராமர், லக்ஷ்மணர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமியுடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் அற்புதமான திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீ ரங்கநாதரை நோக்கியபடியே தலையை ஒரு புறம் சாய்த்த படியே 6 அடி உயரத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறரர். இந்த திருதலத்தில் சக்கரத்தாழ்வாரும் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீரங்கநாதர் சுவாமி சன்னதியில் ஸ்ரீ விஷ்ணு துர்கை அம்மனையும் சேவிக்கலாம்.
இத்திருதலம் அதிகாபுரி மன்னனான இரண்டாம் குலோதுங்க சோழனால் கட்டப்பட்டது. அவர் சோழ மன்னன் பல்லவராயனின் மகளை மணம் முடிக்க எண்ணினார். ஆனால் பல்லவராயனின் மகள், ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அரங்கநாதர், ரங்கநாயகி தாயார் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்தாள், மேலும் ரங்கநாதரையும் தாயாரையும் தினமும் சேவிக்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீரங்கத்தில் தங்க வேண்டும் என்றும் ஆசை கொண்டு இருந்தார். அவள் தன்னை மணம் முடித்த பிறகும் ஸ்ரீ ரங்கநாதரையும் ஸ்ரீ ரங்கநாயகி தாயாரையும் தினமும் சேவிக்கும் படியாக, திருவதிகையை ஆண்ட அதிகாபுரி மன்னன் இத்திருத்தலத்தை கட்டி முடித்தார். பிற்காலத்தில் இத்திருத்தலம் ரங்கநாத பாளயக்காரரால் பராமரிக்கப்பட்டது.
பிரார்த்தனை
பிரதி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் ரங்கநாதர் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமையும், ஆடி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் ரங்கநாதர் மற்றும் தாயாருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது. தீய சக்திகள் விட்டு விலக பக்தர்கள் ஸ்ரீ விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் மேற்கொள்கின்றனர்.
தரிசன நேரம்
காலை : 7.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை : 5.00 மணி முதல் 8.30 மணி வரை.
தொடர்புக்கு
திரு. சேஷாத்ரி பட்டர் : 9942656612
திரு. பாலாஜி பட்டர் : 9626669312
முகவரி
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில்,
வடக்கு பெருமாள் கோவில் வீதி,
திருவதிகை, திருவதிகை போஸ்ட்,
பன்ருட்டி வட்டம்,
கடலூர் மாவட்டம், தமிழ் நாடு - 607106
கோவில் அமைந்துள்ள இடம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பன்ருட்டியிலிருந்து 3 கி.மி. தொலைவில் மற்றும் விழுபுரத்திலிருந்து 32 கி.மி தொலைவில் இருக்கும் திருவதிகை என்னும் கிராமத்தில் இத்திருதலம் அமைந்துள்ளது.
Please click Here for the location map of the temple.
No comments:
Post a Comment