Monday, 23 October 2017

Tamil Nadu Sri Ramar Temples


ஸ்ரீ ராமர் ஆலயங்கள் , தமிழ் நாடு
            Read in English        
   
சீதா தேவி சமேத ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்



                  தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ராமர் திருத்தலங்கள்.




1.  திருப்புள்ளபூதங்குடி - ஸ்ரீ வல்வில் ராமர் திருக்கோவில் (திவ்ய தேசம்), தஞ்சாவூர்  மாவட்டம்.

2.   கும்பகோணம் - ஸ்ரீ ராமசுவாமி திருக்கோவில் , தஞ்சாவூர் மாவட்டம்.

3.  திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோவில் (திவ்ய தேசம்) , தஞ்சாவூர் மாவட்டம்.

4.   நெடுங்குணம் - ஸ்ரீ யோக ராமர் திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.

5.   ரகுநாதசமுத்திரம் - ஸ்ரீ ஞான ராமர் திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.

6.   இஞ்சிமேடு - ஸ்ரீ யஃன ராமர் சன்னதி, ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில் , திருவண்ணாமலை  மாவட்டம்.

7.   பெரிய கொழப்பலூர் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்  திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.

8.   படவேடு - ஸ்ரீ யோக ராமர்  திருக்கோவில்  , திருவண்ணாமலை மாவட்டம்.

9.   மதுராந்தகம் - அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் (ஸ்ரீ ஏரிக்காத ராமர்) திருக்கோவில் ,காஞ்சிபுரம் மாவட்டம்.

10.  உணமன்சேரி - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , காஞ்சிபுரம் மாவட்டம்.

11.  திருப்புக்குழி - ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோவில் (திவ்ய தேசம்), காஞ்சிபுரம் மாவட்டம்.

12.  பொன்பதிர்கூடம் - ஸ்ரீ சதுர்புஜ ராமர் திருக்கோவில் , காஞ்சிபுரம் மாவட்டம்.

13.  மேப்பூர் - ஸ்ரீ ராமா திருக்கோவில் , திருவள்ளூர் மாவட்டம்.

14.  திருவள்ளூர் - ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி திருக்கோவில் (திவ்ய தேசம்), திருவள்ளூர் மாவட்டம்.

15.  வெள்ளை தோட்டம் (வெஸ்ட் மாம்பழம்) - கோதண்டராமர் திருக்கோவில் , சென்னை மாவட்டம்.

16.  நந்தம்பாக்கம் - அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவில் , சென்னை 

17.  தரமணி - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , சென்னை 

18.  நூதென்சேரி( மாடம்பாக்கம்)- கோதண்ட ராமர் திருக்கோவில் , சென்னை 

19.  சத்துவாச்சாரி - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , வேலூர் மாவட்டம்.

20.  ஓசூர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , கிருஷ்ணகிரி மாவட்டம்.

21.  வேங்கடம்பட்டி - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , தர்மபுரி மாவட்டம்.

22.  ஒண்டிப்புதூர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , கோவை மாவட்டம்.

23. ஆர்.எஸ். புரம் - ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோவில் , கோவை மாவட்டம்.

24.   ராம் நகர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , கோவை மாவட்டம்.

25.  அயோத்யாபட்டினம் - ஸ்ரீ கோதண்டபாணி ராமர் திருக்கோவில் , சேலம் மாவட்டம்.

26.  செல்லியம்பாளையம் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , பெரம்பலூர் மாவட்டம்.

27.  தில்லைவிலகம் - ஸ்ரீ வீர கோதண்டராமர் திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.

28.  வடுவூர் - ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.

29.  பருத்தியூர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.

30.  முடிகொண்டான் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.

31.  அடம்பர் - ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் , திருவாரூர் மாவட்டம்.

32.  விருதுநகர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில்  , விருதுநகர் மாவட்டம்.

33.  சிவகாசி - கல்யாண ராமர் திருக்கோவில்  , விருதுநகர் மாவட்டம்.

34.  வெங்கட்டாம்பேட்டை - ஸ்ரீ சயன ராமர் சன்னதி , வேணுகோபால சுவாமி திருக்கோவில் , கடலூர் மாவட்டம்.

35.  ஆடலூர் - ஸ்ரீ ராமர் திருக்கோவில் , திண்டுக்கல் மாவட்டம்.

36.  திருப்புல்லானி - ஸ்ரீ தர்ப சயன ராமர் சன்னதி , ஸ்ரீ ஆதி (கல்யாண) ஜெகநாத பெருமாள் திருக்கோவில் (திவ்ய தேசம்), ராமநாதபுரம் மாவட்டம்.

37.  ராமேஸ்வரம் - ராமரோக திருக்கோவில் (ராமர் பாதம் சன்னதி ), ராமநாதபுரம் மாவட்டம்.


Please Click Here for the location map of the temples.


Wednesday, 11 October 2017

TamilNadu Narasimhar Temples


ஸ்ரீ  நரசிம்மர் ஆலயங்கள் , தமிழ் நாடு

                                                                                                                                                      Read in English


ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்,  பூவரசங்குப்பம்



       தமிழ் நாட்டில் உள்ள நரசிம்மர் திருத்தலங்கள்.




 1. சோளிங்கர் - அருள்மிகு  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி  திருக்கோவில் (திவ்ய தேசம்) ,  வேலூர் மாவட்டம்.

2. சிங்கிரி கோயில் - அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்  திருக்கோவில் ,  வேலூர் மாவட்டம்.

3. திருவேளுக்கை - ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் திருக்கோவில் (திவ்ய தேசம்) , காஞ்சிபுரம் மாவட்டம்.

4. பழையசீவரம் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில் , காஞ்சிபுரம் மாவட்டம்.

5. கட்டவாக்கம்  - ஸ்ரீ  விஸ்வரூப லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில் , காஞ்சிபுரம்  மாவட்டம்.

6. இடக்கழிநாடு - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , காஞ்சிபுரம் மாவட்டம்.

7. செவிலிமேடு - ஸ்ரீ  நரசிம்மர் திருக்கோவில் , காஞ்சிபுரம் மாவட்டம்.

8. பொன் விளைந்த களத்துாா் - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , காஞ்சிபுரம் மாவட்டம்.

9. சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீ  படலாத்ரி  நரசிம்மர்  திருக்கோவில் , செங்கல்பட்டு மாவட்டம்.

10.நரசிங்கபுரம் - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , திருவள்ளூர் மாவட்டம்.

11. நங்கநல்லூர் -  ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் , சென்னை.

12.  நங்கநல்லூர் - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , சென்னை.

13.  ராமாவரம் - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , சென்னை.

14.  பாலாஜி  நகர் , வேளச்சேரி - ஸ்ரீ  மாலோல  நரசிம்ம  ஸ்வாமி திருக்கோவில் , சென்னை.

15. திருவல்லிக்கேணி - ஸ்ரீ துளசிங்க பெருமாள் திருக்கோவில் , சென்னை.

16.  வியாசர்பாடி  - ஸ்ரீ பஞ்சமுக  லக்ஷ்மி  நரசிம்மர் திருக்கோவில் , சென்னை.

17. வேளச்சேரி  - ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவில் , சென்னை.

18. திருநீர்மலை - ஸ்ரீ பால நரசிம்மர், அருள்மிகு  ரங்கநாத  பெருமாள்  திருக்கோவில் , சென்னை.

19. சைதாப்பேட்டை - ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச  நரசிம்ம  பெருமாள் திருக்கோவில் , சென்னை.

20.  அவனியாபுரம் - ஸ்ரீ நவ நரசிம்மர் திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.

21.  இஞ்சிமேடு - ஸ்ரீ கல்யாண லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில் (ஸ்ரீ வரதராஜ பெருமாள்  திருக்கோவில்) , திருவண்ணாமலை  மாவட்டம்.

22.  படவேடு - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.

23.  போளூர் - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , திருவண்ணாமலை  மாவட்டம்.

24. சோகத்தூர் - ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவில் , திருவண்ணாமலை மாவட்டம்.

25. வரதானப்பள்ளி - ஸ்ரீ நரசிம்மர் திருக்கோவில் , கிருஷ்ணகிரி மாவட்டம்.

26. அகரம்  - அபய ஹஸ்த சுயம்பு ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில் , ஓசூர் மாவட்டம்.

27.  பென்னாகரம் - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , தர்மபுரி மாவட்டம்.

28.  நங்கவள்ளி  - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , சேலம் மாவட்டம்.

29. நாமக்கல்  - ஸ்ரீ நரசிம்மஸ்வாமி திருக்கோவில் , நாமக்கல் மாவட்டம்.

30. தேவர்மலை - ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவில் , கரூர் மாவட்டம்.

31. சிந்தலவாடி - ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவில் , கரூர் மாவட்டம்.

32.  உக்கடம் - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , கோவை மாவட்டம்.

33.  தாளக்கரை - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , கோவை மாவட்டம்.

34.   அவிநாசி (தண்டுகாரன்பாளையம்) - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , திருப்பூர் மாவட்டம்.

35. திண்டிவனம் - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , விழுப்புரம் மாவட்டம்.

36. எண்ணாயிரம் - ஸ்ரீ அழகிய  நரசிம்ம  பெருமாள் திருக்கோவில் , விழுப்புரம் மாவட்டம்.

37. பூவரசங்குப்பம் - அருள்மிகு  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி  திருக்கோவில் , விழுப்புரம் மாவட்டம்.

38. பரிக்கல் - அருள்மிகு  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி  திருக்கோவில் , விழுப்புரம் மாவட்டம்.

39. அந்திலி - ஸ்ரீ  லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில் , விழுப்புரம் மாவட்டம்.

40. அபிஷேகப்பாக்கம் ( சிங்கிரிக்குடி ) - ஸ்ரீ உக்கிர  நரசிம்மர் திருக்கோவில் , கடலூர் மாவட்டம்.

41. திருவதிகை - சரநாராயண  பெருமாள் / சயன  நரசிம்மர்  திருக்கோவில் , கடலூர் மாவட்டம்.

42. ஸ்ரீரங்கம்  - ஸ்ரீ  கட்டழகியசிங்கர் பெருமாள் திருக்கோவில் , திருச்சி மாவட்டம்.

43. அல்லித்துறை - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்ம  பெருமாள்  திருக்கோவில் , திருச்சி மாவட்டம்.

44. தஞ்சை  - ஸ்ரீ  வீர நரசிம்மர்  பெருமாள் திருக்கோவில் (திவ்ய தேசம்) , தஞ்சாவூர் மாவட்டம்.

45. திருச்சேரை - ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதி, ஸ்ரீ சாரநாத பெருமாள் திருக்கோவில் உட்புறம் , தஞ்சாவூர் மாவட்டம்.

46. நரசிங்கன்பேட்டை - ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவில் , தஞ்சாவூர் மாவட்டம்.

47. திருப்புள்ளபூதங்குடி - ஸ்ரீ  யோக நரசிம்மர் (ஸ்ரீ  உத்யோக  நரசிம்மர் ) சன்னதி,  ஸ்ரீ  வல்வில் ராமர் திருக்கோவில் , தஞ்சாவூர் மாவட்டம்.

48.  ஆதனூர்  - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர்  திருக்கோவில் , தஞ்சாவூர் மாவட்டம்.

49.  திருவாழி - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்ம  பெருமாள் திருக்கோவில் (திவ்ய தேசம்) , நாகப்பட்டினம் மாவட்டம்.

50. திருநகரி - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்ம  பெருமாள் திருக்கோவில் (திவ்ய தேசம்) , நாகப்பட்டினம் மாவட்டம்.

51. திருக்குறையலூர் -  ஸ்ரீ நரசிம்மர்  திருக்கோவில் , நாகப்பட்டினம் மாவட்டம்.

52. யானைமலை (நரசிங்கம்) - ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவில் , மதுரை மாவட்டம்.

53. மண்ணாடிமங்கலம் - ஸ்ரீ  நரசிம்ம  பெருமாள் திருக்கோவில் , மதுரை மாவட்டம்.

54. ரெட்டியார்ச்சத்திரம் - ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவில் , திண்டுக்கல் மாவட்டம்.

55. வி. மேட்டுப்பட்டி - ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவில் , திண்டுக்கல் மாவட்டம்.

56. வேடசந்தூர்- திருக்கோவில் , திண்டுக்கல் மாவட்டம்.

57. உத்தமபாளையம்  - ஸ்ரீ  நரசிம்ம சுவாமி திருக்கோவில் , தேனி மாவட்டம்.

58.  ஸ்ரீவில்லிபுத்தூர்  - ஸ்ரீ லக்ஷ்மி  நரசிம்மர் சன்னதி, ஸ்ரீ வடபத்ரசாயி திருக்கோவில் , விருதுநகர் மாவட்டம்.

59. கீழப்பாவூர் - ஸ்ரீ உக்கிர நரசிம்மர் திருக்கோவில் , திருநெல்வேலி மாவட்டம்.

60. அம்பாசமுத்திரம் -  ஸ்ரீ  நரசிம்ம சுவாமி சன்னதி, ஸ்ரீ புருஷோத்தம பெருமாள்  திருக்கோவில் , திருநெல்வேலி மாவட்டம்.

61. மேலமாட வீதி, திருநெல்வேலி -  ஸ்ரீ  நரசிம்ம பெருமாள் திருக்கோவில் , திருநெல்வேலி மாவட்டம்.


    Please click Here for the location map of the temples.


    Monday, 9 October 2017

    Sri Ranganathar Kovil Thiruvathigai

    அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில், திருவதிகை
    Read in English       
    ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், திருவதிகை

    ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், திருவதிகை
    கோயில் கோபுரம்


    கோயில் கோபுரத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள்

    தாயார் சன்னதி
    மூலவர் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்
    மூலவர் ஸ்ரீ ரங்கநாயகி தாயார்

    உற்சவர் புஷ்ப அலங்கார சேவை 

    ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார் புஷ்ப அலங்காரம்
    உற்சவர் ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்
    சீதா தேவி சமேத ஸ்ரீ கோதண்ட ராமர், லக்ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயர் 




    கோவில் விவரங்கள்



    மூலவர்

              ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி  சயன திருக்கோலம் நாபிக்கமலத்தில் பிரம்மா.


    தாயார் 

             ஸ்ரீ ரங்கநாயகி தாயார் அமர்ந்த  திருக்கோலம் தனி சன்னதி.                 


    உற்சவர்  

             ஸ்ரீ அழகிய மணவாளன் பெருமாள் என்னும் ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி  உடன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்.


    தல தீர்த்தம்  

             கருட நதி , பினகினி என்னும் பென்னை ஆறு.


    மற்ற சன்னதிக்கள்

             ஸ்ரீ கோதண்டராமர் சன்னதி
                
             மூலவர் சீதா தேவி சமேத ஸ்ரீ கோதண்டராமர் நின்ற திருக்கோலம் உடன் லக்ஷ்மணர் ஆஞ்ஜனேயர் சுவாமி.
             உற்சவர்   சீதா தேவி உடன்  ஸ்ரீ கோதண்டராமர் மற்றும் லக்ஷ்மணர் ஆஞ்ஜனேயர் சுவாமி.
                             
             ஆண்டாள் சன்னதி , சக்கரத்தாழ்வார் சன்னதி , கருடர் சன்னதி.



    தல வரலாறு

         புராண விஷ்ணு தலங்களில் ஒன்றான இத்திருத்தலம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலதில் மூலவராக ஸ்ரீ ரங்கநாதரும்  ஸ்ரீ ரங்கநாயகி தாயாரும் எழுந்தருளியுள்ளனர். இங்கு மூலவர் ஸ்ரீரங்கநாதர் சுவாமி சயன திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயார் சமேதராய், நாபிக்கமலதில் பிரம்மருடன் அருள்பாலிக்கிறார். இத்திருதலதில் ஸ்ரீ ரங்கநாதர் உற்சவர் அழகிய மணவாளனாய் ஸ்ரீதேவி பூதேவி தாயார் உடன் காட்சி தருகிறார்.

          இத்திருத்தலத்தில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் 8  அடி உயர மூலவராக அமர்ந்த திருக்கோலதில் பேரழகுடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். சீதா பிராட்டியுடன் ஸ்ரீ கோதண்ட ராமர், லக்ஷ்மணர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமியுடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் அற்புதமான திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீ ரங்கநாதரை நோக்கியபடியே தலையை ஒரு புறம் சாய்த்த படியே 6 அடி உயரத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறரர். இந்த திருதலத்தில் சக்கரத்தாழ்வாரும் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.  ஸ்ரீரங்கநாதர் சுவாமி  சன்னதியில் ஸ்ரீ விஷ்ணு துர்கை அம்மனையும் சேவிக்கலாம்.

        இத்திருதலம் அதிகாபுரி மன்னனான இரண்டாம் குலோதுங்க சோழனால் கட்டப்பட்டது. அவர் சோழ  மன்னன் பல்லவராயனின் மகளை மணம் முடிக்க எண்ணினார். ஆனால் பல்லவராயனின் மகள், ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அரங்கநாதர், ரங்கநாயகி தாயார் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்தாள், மேலும் ரங்கநாதரையும் தாயாரையும் தினமும் சேவிக்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீரங்கத்தில் தங்க வேண்டும் என்றும் ஆசை கொண்டு இருந்தார். அவள் தன்னை மணம் முடித்த பிறகும் ஸ்ரீ ரங்கநாதரையும்  ஸ்ரீ ரங்கநாயகி தாயாரையும் தினமும் சேவிக்கும் படியாக, திருவதிகையை ஆண்ட அதிகாபுரி மன்னன் இத்திருத்தலத்தை கட்டி முடித்தார். பிற்காலத்தில் இத்திருத்தலம் ரங்கநாத பாளயக்காரரால் பராமரிக்கப்பட்டது.


    பிரார்த்தனை


          பிரதி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் ரங்கநாதர் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமையும், ஆடி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் ரங்கநாதர் மற்றும்  தாயாருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது. தீய சக்திகள் விட்டு விலக பக்தர்கள் ஸ்ரீ விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் மேற்கொள்கின்றனர்.


    தரிசன நேரம் 

                  காலை : 7.00 மணி  முதல் 11.00 மணி வரை  மற்றும்  மாலை : 5.00 மணி  முதல்  8.30 மணி  வரை. 


    தொடர்புக்கு

    திரு. சேஷாத்ரி பட்டர் : 9942656612
    திரு. பாலாஜி பட்டர் :
    9626669312


    முகவரி

    ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில்,
    வடக்கு  பெருமாள் கோவில் வீதி,
    திருவதிகை, திருவதிகை போஸ்ட்,
    பன்ருட்டி வட்டம்,
    கடலூர் மாவட்டம், தமிழ் நாடு - 607106



    கோவில் அமைந்துள்ள இடம்

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பன்ருட்டியிலிருந்து 3 கி.மி.  தொலைவில் மற்றும் விழுபுரத்திலிருந்து 32 கி.மி தொலைவில் இருக்கும் திருவதிகை என்னும் கிராமத்தில் இத்திருதலம் அமைந்துள்ளது.


    Please click Here for the location map of the temple.





    Sunday, 8 October 2017

    Sri Ranganathaswamy Temple Thiruvathigai

                  தமிழில் படிக்க                 

    Sri Ranganathaswamy Temple, Thiruvathigai

    Sri Ranganathaswamy Temple Thiruvathigai
    Temple Gopuram


    Sri Ranganathar in Temple Gopuram

    Thayar Sanithi
    Moolavar Sri RanganathaSwamy with Sridevi  and Bhoodevi Thayars 
    Moolavar Sri Ranganayaki Thayar

    Utchavar Pushpa Alankara Seva

    SriRanganathaswamy with Sridevi and Bhoodevi Thayars Pushpa Alankaram
    Utchavar SriRanganathaswamy with Sridevi and Bhoodevi Thayars
    Sita Devi sametha Sri Kodhanda Ramar with Lakshmanar and Anjaneya Swami




    Temple Details


    Moolavar (Main Deity) 

                    Sri RanganathaSwamy  with Sridevi Thayar and Bhoodevi Thayars.
                    Sri RanganathaSwamy is in Sayana Thirukolam (Reclining posture) with Lord Brahma in Nabhi Kamalam.
                                                                                        
                    Sri Ranganayaki Thayar also known as Sri Adhigavalli Thayar is in Amarntha Thirukolam ( Sitting Posture) in Thani Sanithi (Separate Shrine ).

    Utchavar (Festival Deity) 

                    Sri Ranganathaswamy also called as Azhagiya Manavalan swamy with Sridevi and Bhoodevi Thayars.
                    Sri Ranganayagi Thayar in separate shrine.

    Sthala Theertham
                       
                    Garuda Nathi , Pinagini (Pennai River)

    Other Sanithis
                            
                    Kodhandaramar Sanithi
                   Moolavar Sita Devi sametha KodhandaRamar with Lakshmanar in standing posture holding Kodhandam (Lord's Bow).
                  Utchavar Sri KodhandaRamar with Sita Devi and Lakshmanar and Baktha Anjaneya swamy.
                  
                 Andal Sanithi and Chakrathazhwar Sanithi and Garudazhwar Sanithi
             
                            
    Temple History

                 This temple is one of the ancient Vishnu temples in TamilNadu which is around 1400 years old. Moolavar the Main Deity is Lord Sri Ranganathaswamy and His Consort Sri Ranganayaki Thayar. Sri Ranganathaswamy is in reclining posture (Sayana Thirukolam) along with Sridevi and Bhoodevi Thayars sitting next to the Lord. We can also take dharshan of  Utchavar Sri RanganathaSwamy as Azhagiya Manavala Swamy with Sridevi and Bhoodevi Thayars. Devi Sri Vishnu Durgai is present in Ranganathaswamy Shrine blessing the devotees.

                 Sri Ranganayaki Thayar is in the separate Shrine. Thayar is so graceful in sitting posture ( Amarntha Thirukolam) and is 8 feet height. There is separate shrine for Sri Sita Devi sametha Sri KodhandaRamar. Here Lord Sri Rama blesses the devotees in a standing posture (Nindra Thirukolam) along with Thayar Sita Pirati with Lakshmanar and Sri Anjaneyaswamy. There is a separate Shrine for Sri Andal where Nachiyar is in standing posture (Nindra Thirukolam)  and is around 6 feet height, beautifully facing towards the Lord. We can take dharshan of  Chakrathazhwar in separate shrine.

               The king 2nd Kulothunga Chola who was ruling Thiruvathigai (Athikapuri King ) built this temple for Sri Ranganathaswamy and Sri Ranganayaki Thayar. As the king wanted to marry Chola King Pallavaraya's daughter who is a great devotee of Sri Ranganathaswamy and Thayar and wanted to stay in SriRangam to have Lord's and Mother's darshan daily, he built this beautiful temple for Lord and Thayar so the Princess will not miss the darshan of the Lord and Mother. In the later period the temple was maintained by Ranganatha palayakar.


    Prarthana Sthalam

    Devotees perform Thirumanjanam (Abhishegam ) to Ranganayaki Thayar and to Sri RanganathaSwamy as prarthana for different problems.
    Special Maha Thirumanjanam and pooja are conducted here for Lord and Thayar on Revathi star every month.
    Pushpa Alankara seva (Flower decoration) is conducted on 3rd Saturday in Puratasi and on 3rd Friday in Aadi months.
    Prarthana and pooja are performed to Sri Vishnu Durga amman to get rid of any adverse and evil effects.

    Timings

    7.00 to 11.00 am  5.00 to 8.30 pm

    Contact Details

    Thiru. Seshathri Bhattar : 9942656612.
    Thiru. Balaji Bhattar : 9626669312.


    Temple Address

    Sri Ranganatha Perumal Temple,
    South Perumal Kovil Street,
    Thiruvathigai, Thiruvathigai Post ,
    Panruti Thaluk,
    Cuddalore District, Tamil Nadu 607106

    Location 

    This temple is situated in a village called Thiruvathigai which is around 3 kilometres from Panruti bus stand in Cuddalore district and is around 32 kilometers from Villupuram.


    Please click Here for the location map of the temple.